ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களது முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் முல்லைத்தீவில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. முன்னதாக முள்ளிவாய்க்கால் சென்ற பா.அரியநேந்திரன் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின் வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். Read more
ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக இலங்கைக்கான தமது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் பிரதானியாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நாச்சோ சான்செஸ் அமோரை ஐரோப்பிய ஒன்றியம் நியமித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பைத் தொடர்ந்து எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காகத் தேர்தல் கண்காணிப்புக் குழுவை இலங்கைக்கு அனுப்புவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஸ்ப்ரூன்ஸ் (USS Spruance) நாசகாரி கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் தமது சம்பிரதாயங்களுக்கமைய இன்று முற்பகல் வரவேற்றனர். 160 மீற்றர் நீளம் கொண்ட குறித்த கப்பல்இ 338 பணியாளர்களுடன் வருகை தந்துள்ளது. மீள் நிரப்புதல்கள் நோக்கத்துக்காக இலங்கை வந்துள்ள குறித்த அமெரிக்க நாசகாரி கப்பல் நாளைய தினம் மீண்டும் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து வர்த்தகர்களையும் பதிவு செய்வதற்காகத் தரவு கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான செயலி ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் 27ஆவது பிரிவுக்கமைய அனைத்து வர்த்தகர்களும் பதிவு செய்திருக்க வேண்டும். எனினும் கடந்த இரண்டு தசாப்தங்களாக இது உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.