Header image alt text

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தமது பிரசார பணிகளின் போது வாக்காளருக்காக செலவிடக் கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தேர்தல் பிரசாரத்தின் போது ஒரு வாக்காளருக்காக வேட்பாளர் ஒருவர் 109 ரூபாவையே செலவிட முடியும் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரியராஜ் சிந்துஜா என்ற பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதம் ஒன்று மத்திய சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரி பெண் அதிக குருதி போக்கு காரணமாகக் கடந்த மாதம் 28ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். Read more

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 35 முறைப்பாடுகள் நேற்றைய தினம் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த ஜூலை 31 ஆம் திகதியிலிருந்து நேற்று வரை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 666 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. குறித்த முறைப்பாடுகளில் தேர்தல் சட்டமீறல் தொடர்பான 642 முறைப்பாடுகளும் தேர்தலுடன் தொடர்புடைய வேறு வகையான 23 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவது தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் சட்ட மாஅதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. குறித்த தீர்ப்பிற்கமைய மேற்கொள்ளப்படக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மேலும் தௌிவுபடுத்திக்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் சட்ட மாஅதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார். Read more

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து கனரக வாகன ஓட்டுநர் உரிமங்களையும் அடுத்த 3 மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தையும் இரத்துச் செய்வதன் கீழ் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். Read more

நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போதியளவான முன்பதிவு இல்லாமை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் இந்த நடைமுறை காணப்படும் எனவும் பயணிகள் வருகை அதிகரிப்பின் அடிப்படையில் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் நாளாந்தம் குறித்த கப்பல் சேவையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more