ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 35 முறைப்பாடுகள் நேற்றைய தினம் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த ஜூலை 31 ஆம் திகதியிலிருந்து நேற்று வரை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 666 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. குறித்த முறைப்பாடுகளில் தேர்தல் சட்டமீறல் தொடர்பான 642 முறைப்பாடுகளும் தேர்தலுடன் தொடர்புடைய வேறு வகையான 23 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.