வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் சிசு ஒன்று உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடமாகாண சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் சமன் பத்திரன இந்தத் தகவலைத் தெரிவித்தார். கடந்த 18ஆம் திகதி மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உரிய நேரத்துக்குள் தன்னை சத்திரசிகிச்சைக்கு எடுக்காமையாலேயே தனது குழந்தை மரணித்தாகக் குற்றம் சுமத்தும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. Read more
தாம் தொழில் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் தாம் இராஜாங்க அமைச்சராகப் பதவி ஏற்றதாக குறிப்பிட்டார். அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவுக்கு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும்போதுஇ இந்து – அரேபிய எண்கள் அல்லது ஒரு புள்ளடியை மாத்திரம் பதிவு செய்ய வேண்டும் எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் விருப்பு வாக்குகளைப் பதிவுசெய்யும்போது 2 அல்லது 3 என்ற இலக்கங்களை மாத்திரமே பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரல இன்று அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றின் ஊடாக அவர் இதனை தெரிவித்தார். தமது கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதி தலைவரும் அரசியல் எதிரிகளாக மாறி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அவர் கூறியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோருக்கு ஜனாதிபதி ஆலோசகர் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிராகத் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியினால் இந்த முறைப்பாடு கையளிக்கப்பட்டுள்ளது. ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமைகளில் இருந்து நீக்கப்பட்டனர். இதனையடுத்து குறித்த இருவரும் ஜனாதிபதியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.