வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் சிசு ஒன்று உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடமாகாண சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் சமன் பத்திரன இந்தத் தகவலைத் தெரிவித்தார். கடந்த 18ஆம் திகதி மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உரிய நேரத்துக்குள் தன்னை சத்திரசிகிச்சைக்கு எடுக்காமையாலேயே தனது குழந்தை மரணித்தாகக் குற்றம் சுமத்தும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் இது தொடர்பாக வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக குறித்த தாயாரின் குடும்பத்தினரால் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டு வருகின்றமையும் அங்கு பொலிசாரின் பிரசன்னம் இரும்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த காணொளியில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பரிசீலனைகள் முன்னெடுக்கப்படும் எனவும் வடமாகாண சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் சமன் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.