Header image alt text

புளொட் ஜெர்மன் கிளை அமைப்பாளர் தோழர் பவானந்த் அவர்களது அன்புத் தாயார் அமரர் திருமதி. நல்லதம்பி அம்பிகாபதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு இன்று (22.08.2024) சமூகப்பணிகள் இடம்பெற்றன. ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு ஆத்ம சாந்தி பிரார்த்தனை இடம்பெற்றது. தொடர்ந்து கானகா , ஐயனார் , கேதீஸ் ஆகிய மூன்று மகளிர் அமைப்புக்களுக்கு சுழற்சி முறை கடன் திட்டத்தின் அடிப்படையில் ஒரு தொகை நிதி வழங்கப்பட்டது .

Read more

22.08.2006இல் திருகோணமலையில் மரணித்த தோழர் குமார் (முத்துலிங்கம் பாலச்சந்திரன்- திருமலை) அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் பங்கேற்புடன் ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவை மாணவர் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த பாடசாலைகளில் 6ஆம் தரத்திலிருந்து 9ஆம் தரம் வரையில் பயிலும் மாணவர்கள் இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளனர். அதன் ஆரம்ப நடவடிக்கைகளின் முடிவுகளின் அடிப்படையில் எதிர்காலங்களில் ஏனைய பாடசாலைகளிலும் இந்த திட்டம் விஸ்தரிக்கப்படுவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

வடமாகாணத்தில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் வேலைத்திட்டங்களுக்கான தமது நிதிப் பங்களிப்பை ஜப்பான் அரசாங்கம் மேலும் நீடித்துள்ளது. சுமார் 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு வேலைத்திட்டங்களுக்கான ஒப்பந்தம் கொழும்பில் ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் மிசுகோசி இடியேக்கி மற்றும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் இரண்டு நிறுவனங்களின் பிரதானிகளுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது. Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு எந்தவகையிலும் ஜனாதிபதித் தேர்தலைப் பாதிக்காது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு திட்டமிட்டவகையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தாதுவிட்டமை அடிப்படை உரிமை மீறல் என்றும், அந்தத் தேர்தலைக் கூடிய விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பை அறிவித்திருந்தது. Read more

2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச பணியாளர்களதும் அடிப்படை வேதனத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொதுச் சேவைத் துறையினரின் வேதன பிரச்சினைகள் தொடர்பான நிபுணர்கள் குழுவின் தலைவர் உதய செனவிரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் கடைநிலை அரச பணியாளர்களின் அடிப்படை வேதனம் 24 சதவீதத்தினாலும் உயர்நிலையில் உள்ள அரச பணியாளர்களின் வேதனம் அவர்களின் தகுதிகளுக்கு அமைய 24 முதல் 50 சதவீதம் வரையிலும் அதிகரிக்கப்படவுள்ளது. Read more

திட்டமிடப்பட்ட வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாமையின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கமைய கூடிய விரைவில் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more

வடமாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பு இலக்கங்கள் அடங்கிய அறிவிப்பு பதாகை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், நோயாளர்களும் வைத்தியர்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், சேவையை பெற்றுக்கொள்வதில் தாமதம் அல்லது சிக்கல் ஏற்பட்டால் தொடர்புகொள்ள வேண்டிய உயரதிகாரிகளின் தொடர்பு இலக்கங்கள் ஆகியன குறித்த பதாகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். Read more