புளொட் ஜெர்மன் கிளை அமைப்பாளர் தோழர் பவானந்த் அவர்களது அன்புத் தாயார் அமரர் திருமதி. நல்லதம்பி அம்பிகாபதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு இன்று (22.08.2024) சமூகப்பணிகள் இடம்பெற்றன. ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு ஆத்ம சாந்தி பிரார்த்தனை இடம்பெற்றது. தொடர்ந்து கானகா , ஐயனார் , கேதீஸ் ஆகிய மூன்று மகளிர் அமைப்புக்களுக்கு சுழற்சி முறை கடன் திட்டத்தின் அடிப்படையில் ஒரு தொகை நிதி வழங்கப்பட்டது .
இந் நிகழ்வில் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் தவராஜா மாஸ்டர், கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் ஜூட்சன், முள்ளியவளை மேற்கு வட்டார அமைப்பாளர் சஞ்ஜீவன், கட்சியின் ஆலோசகர் சி.வன்னியசிங்கம், முள்ளியவளை வட்டார அமைப்பாளர் ரூபன், மூன்று மகளிர் குழுவின் தலைவிகளான சுதா, மரியநாயகி, ஜெயந்தினி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
