Header image alt text

தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் இன்று மதியம் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலிய நிறுவனம் அடுத்த மாதம் முதல் இலங்கையில் எரிபொருள் விநியோக செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது. குறித்த நிறுவனத்தினர் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் எரிபொருளை விநியோகிக்கவுள்ளனர். இதற்கமைய இலங்கைக்குள் பிரவேசித்துள்ள நான்காவது வெளிநாட்டு நிறுவனமாக யுனைடட் பெற்றோலிய நிறுவனம் கருதப்படுகிறது. Read more

இலத்திரனியல் ரயில் பயணச்சீட்டுக்களை(e-ticket) கைத்தொலைபேசி ஊடாக பெற்றுக்கொள்ளும் நடைமுறை இன்று(23) முதல் செயற்படுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. www.prawesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக அனைத்து ரயில் பயணங்களுக்குமான பயணச்சீட்டுகளை இந்த முறையின் ஊடாக ஒதுக்கிக்கொள்ள முடியும் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எம்.ஜே.இதிபொலகே தெரிவித்துள்ளார்.

2024 ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்க 712,319 பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் குருணாகல் மாவட்டத்தில் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய குருணாகல் மாவட்டத்தில் 76,977 பேர் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்இ தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு தமது பிரத்தியேக ஆதரவை வழங்கவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் தேர்தலாக இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். Read more