2024 ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்க 712,319 பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் குருணாகல் மாவட்டத்தில் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய குருணாகல் மாவட்டத்தில் 76,977 பேர் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.