Posted by plotenewseditor on 24 August 2024
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 24 August 2024
Posted in செய்திகள்
தமிழ் அரச அதிகாரிகள், அரச ஊழியர்கள் அனைவரையும் அன்புரிமையுடன் வேண்டுகிறேன்!Posted by plotenewseditor on 24 August 2024
Posted in செய்திகள்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 901 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 877 முறைப்பாடுகளும் வன்முறை தொடர்பில் ஒரு முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 24 August 2024
Posted in செய்திகள்
உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் எனும் போர்வையில் சில மோசடி குழுக்கள் வர்த்தக நிலையங்களுக்குச் சென்று வரிப் பணத்தை வசூலிப்பதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைப்பதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு, வென்னப்புவ, மினுவாங்கொடை ஆகிய பகுதிகளில் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென திணைக்களத்தின் மத்திய குழு குறிப்பிட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 24 August 2024
Posted in செய்திகள்
தாய்லாந்தில் அடுத்த மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த பிம்ஸ்டெக் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிம்ஸ்டெக் மாநாட்டில் இலங்கை, இந்தியா, மியன்மார், பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் பங்குகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.