கடவுச்சீட்டு விநியோக விடயத்தில் அரசாங்கம் இன்னும் கிரமமாக செயற்பட்டிருக்க வேண்டும் எனவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். வெற்றுக் கடவுச்சீட்டுகளின் பற்றாக்குறையால் புதிய கடவுச்சீட்டு விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. Read more
கடவுச்சீட்டு விநியோகம் தாமதமடைந்துள்ள நிலையில் பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்துக்கு முன்பாக இன்றும் நீண்ட வரிசையில் மக்கள் தெரிவிக்கப்படுகிறது. காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இன்று காலை பாத் பைன்டர் அமைப்பின் ஸ்தாபகர் மிலிந்த மொரகொடவை சந்தித்தார்.
‘கிளப் வசந்த’ என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் சந்தேகநபர்கள் பயணித்த காரை செலுத்திய சாரதி என சந்தேகிக்கப்படும் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியா – மெல்பேர்னில் 23 வயதுடைய இலங்கைத் தமிழ் ஏதிலி ஒருவர் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்குள்ள ஏதிலி வழக்கறிஞர்கள் நேற்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.