கடவுச்சீட்டு விநியோக விடயத்தில் அரசாங்கம் இன்னும் கிரமமாக செயற்பட்டிருக்க வேண்டும் எனவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். வெற்றுக் கடவுச்சீட்டுகளின் பற்றாக்குறையால் புதிய கடவுச்சீட்டு விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பல நாட்களாக பொது மக்கள் கடவுச் சீட்டினைப் பெற்றுக் கொள்வதற்காக காத்திருக்கின்றனர். பொதுமக்கள் இவ்வாறு அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளமை கவலையளிப்பதாகவும், அரசாங்கம் இந்த விடயத்தில் இன்னும் கிரமமாக செயற்பட்டிருக்க வேண்டும் என்பதை ஏற்றும் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொள்வனவு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள வெற்று கடவுச்சீட்டு புத்தகங்கள் ஒக்டோபர் 16ஆம் திகதி கிடைக்கப்பெறும் எனவும் அதுவரையில் இந்த சூழ்நிலை தொடரும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.