30.08.1991 – 30.08.2024Posted by plotenewseditor on 30 August 2024
Posted in செய்திகள்
30.08.1991 – 30.08.2024Posted by plotenewseditor on 30 August 2024
Posted in செய்திகள்
இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 39ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் எதிர்வரும் 02.09.2024ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளன.Posted by plotenewseditor on 30 August 2024
Posted in செய்திகள்
சர்வதேச காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் மற்றும் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வடக்கு கிழக்கு மாகாண உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் பேரணிகள் இடம்பெற்றன. இதற்கமைய யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமான பேரணி காங்கேசன்துறை வீதி ஊடாக முனியப்பர் கோவிலடி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது. Read more
Posted by plotenewseditor on 30 August 2024
Posted in செய்திகள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 30 August 2024
Posted in செய்திகள்
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால்இ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இதன்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு குறித்து அவர்கள் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.
Posted by plotenewseditor on 30 August 2024
Posted in செய்திகள்
இலங்கையின் நெடுந்தீவுஇ நயினாதீவு மற்றும் அனலைத்தீவு பகுதிகளில் ஹைபிரிட் எனப்படும் கலப்பு முறையில் முன்னெடுக்கப்படவுள்ள எரிசக்தி வேலைத்திட்டத்திற்கான முதலாவது கொடுப்பனவு இந்தியாவால் வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவினால் எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன மற்றும் இலங்கை நிலைபேறான வலுசக்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் சேபாலவிடம் குறித்த கொடுப்பனவு கையளிக்கப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 30 August 2024
Posted in செய்திகள்
சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகள் மற்றும் கட்அவுட்களை நீக்குவதற்காக 1500 தொழிலாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் இடம்பெறும் சட்டவிரோத தேர்தல் பிரசார செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்துள்ளார். இதனிடையே 54,000 பொலிஸாரை ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்தவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அசங்க கரவிட்ட மேலும் தெரிவித்துள்ளார்.