கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவரின் கொலை தொடர்பில் கைதான மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 29ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட அமல் சில்வா தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்றைய தினம் அவர் கடுவலை நீதவான் முன்னிலையில் பிரச்சன்னப்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

கொலையாளிகளுக்குத் தங்குமிட வசதி மற்றும் ஆதரவை வழங்கிய குற்றச்சாட்டில் மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினரால் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா கைது செய்யப்பட்டார்.