Header image alt text

சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகள் மற்றும் கட்அவுட்களை நீக்குவதற்காக 1500 தொழிலாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் இடம்பெறும் சட்டவிரோத தேர்தல் பிரசார செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்துள்ளார். இதனிடையே 54,000 பொலிஸாரை ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்தவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அசங்க கரவிட்ட மேலும் தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு விநியோக விடயத்தில் அரசாங்கம் இன்னும் கிரமமாக செயற்பட்டிருக்க வேண்டும் எனவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். வெற்றுக் கடவுச்சீட்டுகளின் பற்றாக்குறையால் புதிய கடவுச்சீட்டு விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. Read more

கடவுச்சீட்டு விநியோகம் தாமதமடைந்துள்ள நிலையில் பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்துக்கு முன்பாக இன்றும் நீண்ட வரிசையில் மக்கள் தெரிவிக்கப்படுகிறது. காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. Read more

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இன்று காலை பாத் பைன்டர் அமைப்பின் ஸ்தாபகர் மிலிந்த மொரகொடவை சந்தித்தார். Read more

‘கிளப் வசந்த’ என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் சந்தேகநபர்கள் பயணித்த காரை செலுத்திய சாரதி என சந்தேகிக்கப்படும் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

அவுஸ்திரேலியா – மெல்பேர்னில் 23 வயதுடைய இலங்கைத் தமிழ் ஏதிலி ஒருவர் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்குள்ள ஏதிலி வழக்கறிஞர்கள் நேற்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். Read more

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தடுத்து இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று(28) தள்ளுபடி செய்யப்பட்டது. Read more

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களின் முதலாவது குழு நாட்டிற்கு வருகை தந்துள்ளது. எதிர்வரும் சில வாரங்களுக்குள் மற்றுமொரு குழுவினர் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர். Read more

தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் கிளிநொச்சி மாவட்டத்தில் தனது பரப்புரையை இன்று ஆரம்பித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட பரப்புரைக் குழு பொது வேட்பாளரை இத்தாவில் சந்தியிலிருந்து கலை நிகழ்வுகளோடு, வரவேற்று அழைத்துச் சென்றது. பளை பேருந்து நிலையத்தில் வரவேற்பு நடனமும் உரைகளும் இடம்பெற்றன. தொடர்ந்து ஆனையிறவு, இயக்கச்சி ஆகிய இடங்களில் வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

Read more