இந்தியக் கடற்படையின் முன்னணி போர்க்கப்பலான ஐஎன்எஸ் மும்பை நாளைய தினம் இலங்கை வரவுள்ளது.
மூன்று நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைவரும் குறித்த கப்பலுக்குக் கொழும்பு துறைமுகத்தில் தமது சம்பிரதாய முறைப்படி வரவேற்பதற்கு இலங்கை கடற்படையினர் திட்டமிட்டுள்ளனர். Read more
		    
அத்தியாவசிய தேவைகளுக்கான விடுமுறைகளுக்கு மாகாண தபால் மாஅதிபர்களிடம் அனுமதி பெற்றுக்கொள்ள முடியுமென தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய முத்திரையிடப்பட்ட பொதிகள் நாளை(26) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
தமிழ் அரச அதிகாரிகள், அரச ஊழியர்கள் அனைவரையும் அன்புரிமையுடன் வேண்டுகிறேன்!
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 901 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 877 முறைப்பாடுகளும் வன்முறை தொடர்பில் ஒரு முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 
உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் எனும் போர்வையில் சில மோசடி குழுக்கள் வர்த்தக நிலையங்களுக்குச் சென்று வரிப் பணத்தை வசூலிப்பதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைப்பதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு, வென்னப்புவ, மினுவாங்கொடை ஆகிய பகுதிகளில் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென திணைக்களத்தின் மத்திய குழு குறிப்பிட்டுள்ளது. 
தாய்லாந்தில் அடுத்த மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த பிம்ஸ்டெக் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிம்ஸ்டெக் மாநாட்டில் இலங்கை, இந்தியா, மியன்மார், பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் பங்குகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் இன்று மதியம் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலிய நிறுவனம் அடுத்த மாதம் முதல் இலங்கையில் எரிபொருள் விநியோக செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது. குறித்த நிறுவனத்தினர் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் எரிபொருளை விநியோகிக்கவுள்ளனர். இதற்கமைய இலங்கைக்குள் பிரவேசித்துள்ள நான்காவது வெளிநாட்டு நிறுவனமாக யுனைடட் பெற்றோலிய நிறுவனம் கருதப்படுகிறது.