காலிமுகத் திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விசேட அறிக்கையை வௌியிட்டுள்ளது. குறித்த வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதியால் அவரது பதவிக் காலத்தில் தமது தனிப்பட்ட பணிக் குழாத்தினருக்காக வழங்கப்பட்டவை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அந்த அறிக்கையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் அடங்குகின்றன. Read more
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்குமாறு கோரி பெற்றோர்கள் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். பிரதான ஆர்ப்பாட்டம் கல்வி அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வௌியானதாக கூறப்படும் முதலாம் வினாத்தாளின் 3 வினாக்களுக்காக அனைத்து மாணவர்களுக்கும் புள்ளிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு நேற்று(29) அறிவித்திருந்தது.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 10 இலட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். அதற்கமைய தபால் மூல விண்ணப்பங்களின் ஒருபகுதி தேர்தல் ஆணைக்குழுவிடம் நேற்று(29) கையளிக்கப்பட்டுள்ளதுடன் எஞ்சிய விண்ணப்பங்கள் இன்று(30) கையளிக்கப்படவுள்ளன.
29.09.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் கனி (செபமாலை ராயப்பு – கன்னாட்டி), இராசலிங்கம் ரஞ்சன் (செட்டிபாளையம்), நவீனன் (கந்தசாமி இன்பராசா – மகிழடித்தீவு) ஆகியோரின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
கட்சியின் யாப்பில் அவசியமான சில திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் பொதுச்சபை உறுப்பினர்களுக்கான விசேட கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது. நூற்றுக்கும் அதிகமான பொதுச்சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இன்றைய விசேட கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் தலைமை தாங்கினார். செயலாளர், உப செயலாளர், உப பொருளாளர், ஆகிய பதவிகள் சம்பந்தமாகவும், கட்சியின் உயர் அங்கத்தில் பெண் உறுப்புரிமையை உறுதிப்படுத்தல் சம்பந்தமாகவும், பொதுச்சபையின் காலம் சம்பந்தமாகவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, மத்தியகுழுவில் சில நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாளைமறுதினம்(30) கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக பதில் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள பிரமுகர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
புதிய அமைச்சுகளுக்கான விடயதானங்கள் மற்றும் பொறுப்புகளை பட்டியலிட்டு அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டது. பாதுகாப்பு படைகளின் தலைமை அலுவலகம், இராணுவம், கடற்படை, விமானப்படை, அரச புலனாய்வு சேவை, இடர் முகாமைத்துவ நிலையம், வளிமண்டலவியல் திணைக்களம் உள்ளிட்ட 26 நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் தமது 74 ஆவது வயதில் காலமானார். 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 ஆம் திகதி பிறந்த குமார வெல்கம இறுதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக களுத்துறை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார். 1984 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர் பல்வேறு அமைச்சுப் பதவிகளையும் வகித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட நியமிக்கப்பட்டுள்ளார். சட்டத்தரணி சங்கத்தின் சட்டத்தரணிகள் பேரவை இன்று(28) கூடிய போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சட்டத்தரணி அனுர மெத்தேகொட, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவராக பதவி வகித்தார். ஜனாதிபதி சட்டத்தரணி ராஸிக் ஸருக், சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான கூட்டம், இன்று யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக உரையாடப்பட்டது. நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளான தமிழ் மக்கள் பொதுச்சபையானது, தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதா இல்லையா என்ற முடிவை எடுப்பதற்கு சனிக்கிழமை வரை அவகாசத்தை கேட்டுள்ளது.