ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) மத்தியகுழுக் கூட்டம் இன்று (01.09.2024) ஞயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் மெய்நிகர் வழியில் இடம்பெற்றது. இதன்போது கட்சியின் நிர்வாக விடயங்கள் பல ஆராயப்பட்டு அவை தொடர்பான தீர்மானங்கள் எட்டப்பட்டதுடன், சமகால அரசியல் நிலைமைகள், ஜனாதிபதித் தேர்தல், பொது வேட்பாளருக்கான பிரச்சாரப் பணிகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.