Header image alt text

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் எனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது அந்த நடவடிக்கைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக அதன் உபதலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார். Read more

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2095 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அதேநேரம் நேற்றைய தினம் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 154 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் புதிய பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய கடவுச்சீட்டுகள் நாட்டுக்குக் கிடைக்குமென குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 50,000,00 புதிய கடவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் அதன் முதல் தொகுதியாக 50,000 கடவுச்சீட்டுகள் நாட்டுக்குக் கிடைக்குமென குடிவரவு – குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது. அவை கிடைத்தவுடன் தற்போது கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு கிட்டுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. Read more