கொழும்பு துறைமுக அதிவேக நெடுஞ்சாலை நிர்மாண பணிகளின் போது கொழும்பு துறைமுக காவல்நிலையத்துக்கு முன்பாக உள்ள சுற்றுவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பில்அகழ்வு பணி இன்று (05) ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று (04) உத்தரவிட்டுள்ளார். துறைமுக காவல்துறையினரின் கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதவான் ஒருவரின் மேற்பார்வையிலும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைமுக காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.