எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்காக பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் தலைவராக பிரதமர் தினேஸ் குணவர்தனவும் செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அருணாச்சலம் அரவிந்தகுமார் ஆகியோரும் இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.