Header image alt text

06.09.1987 இல் மன்னாரில் மரணித்த தோழர் சேகர் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.

ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற உள்நாட்டு வைத்தியர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு மருத்துவ முறையில் பாரம்பரிய மருத்துவர்களும் ஆயுர்வேத பீடத்தில் பட்டம் பெற்றவர்களும் உள்ளனர். கடந்த காலங்களில் சுதேச மருத்துவம் மிகவும் வெற்றிகரமாகக் காணப்பட்டது. Read more

முல்லைத்தீவு – மாங்குளம் – துணுக்காய் பகுதியில் நில கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 4 பணியாளர்கள் காயமடைந்துள்ளனர். நிலக்கண்ணி வெடிகளை அகற்ற முற்பட்ட போது ஏற்பட்ட வெடிப்பில் நேற்றைய தினம் (05) குறித்த நால்வரும் காயமடைந்தனர். காயமடைந்த 4 பேரும் பெண் பணியாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த நால்வரில் மூவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 107ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான 4 புதிய ரூnடிளி;நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே.எம்.ஜி.எச்.குலதுங்கஇ டி.தொடவத்தஇ மற்றும் ஆர்.ஏ.ரணராஜா ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான புதிய நீதியரசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் முன்னாள் சிரேஷ்ட பிரதி மன்றாடியர் நாயகம் எம். சி. எல். பி. கோபல்லவவும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். Read more

மியன்மாரில் ஆயுதம் தாங்கிய குழுவொன்றின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர். குறித்த 20 இலங்கையர்களும் நேற்று நாட்டை வந்தடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஏதிலிகளுக்கான அமைப்பின் அனுசரணையில் தாய்லாந்தின் பெங்கொக்கில் இருந்து அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.