சீனாவில் உள்ள குழந்தைகளை வெளிநாடுகளில் உள்ளவர்கள் தத்தெடுப்பது முழுமையாக நிறுத்தப்படும் என அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களாகச் சீனக் குழந்தைகள் வெளிநாடுகளில் உள்ளவர்களால் தத்தெடுக்கப்பட்டனர். 1992ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் சீனக் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் பெண் குழந்தைகளே அதிகமாகத் தத்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.