Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும், அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் தலைவர், எங்கள் மூத்த சகோதரர் தோழர் த. சித்தார்த்தன் அவர்களின் எழுபத்தாறாவது பிறந்த நாளில், இன்னும் பல ஆண்டுகள் நலம் பெற்று வாழ வேண்டும், தமிழினம் தனது உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தில் காத்திரமான பங்களிப்பினை அவர் வழங்க வேண்டும் என வாழ்த்துகிறோம்.

Read more

தமிழ்த் தேசிய பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்கள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்திருந்தார். இன்றுகாலை காரைதீவுக்கு அவர் வருகை தந்தபோது காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டுடன் வரவேற்கப்பட்டார். காரைதீவில் எமது கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் சங்கரி தலைமையிலும், அக்கரைப்பற்றில் எமது கட்சியின் பிரதேச அமைப்பாளர் தோழர் குணாளன் மாஸ்டர் தலைமையிலும் வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

Read more

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2 இ849 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளது. அதன்படி குறித்த பரீட்சை அன்றைய தினம் காலை 9.30 முதல் பிற்பகல் 12.15 வரை இடம்பெறவுள்ளது. எனவே குறித்த காலப்பகுதியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி நடத்தித் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் பேரணிகள் போன்றவற்றை நடத்துவதைத் தவிர்க்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கோரிக்கை விடுத்துள்ளார். Read more

 உடன் அமுலுக்கு வரும் வகையில் 5 இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியிலிருந்து நீக்கியுள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இராஜாங்க அமைச்சர்களான கீதா குமாரசிங்க ஷஷீந்திர ராஜபக்ஷ அமித் தேனுக விதானகமகே பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி. சானக ஆகியோரே இவ்வாறு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து தொடர்ச்சியாக புலனாய்வு அறிக்கைகளை பெற்றுக்கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் வேட்பாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் மக்கள் சந்திப்புகள் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பே அந்த பகுதியின் பாதுகாப்பு தொடர்பில் அறிக்கை கோரி ஆராயப்படும் என அமைச்சு கூறியுள்ளது. Read more

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 20 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மூடப்படவுள்ள பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வாக்களிப்பு மத்திய நிலையமாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகள் செப்டெம்பர் 19 ஆம் திகதி பாடசாலை நேரத்தின் பின்னர் தேவைக்கேற்ப கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. Read more