தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும், அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் தலைவர், எங்கள் மூத்த சகோதரர் தோழர் த. சித்தார்த்தன் அவர்களின் எழுபத்தாறாவது பிறந்த நாளில், இன்னும் பல ஆண்டுகள் நலம் பெற்று வாழ வேண்டும், தமிழினம் தனது உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தில் காத்திரமான பங்களிப்பினை அவர் வழங்க வேண்டும் என வாழ்த்துகிறோம்.

தமிழினத்தின் சார்பாக பேசவல்லவராக, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் வழங்கப்பட்ட பொறுப்பினை, தொடர்ந்து இன்றுவரை, அரசியல் யதார்த்தங்களின் அடிப்படையிலும் கிடைத்த அனுபவங்களினூடான பட்டறிவின் அடிப்படையிலும் முன்னெடுத்துச் செல்லும் ஜனநாயகப் போராளியாக அவரை நாம் காண்கிறோம்.
தமிழினத்தின் வாழ்வியல் அம்சங்களுக்கும், தமிழினத்தின் மத்தியில் கட்டிக் காக்கப்பட வேண்டிய ஒற்றுமைக்கும், தனது அரசியல் தீர்மானங்களும் செயற்பாடுகளும் மேலும் மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும் என்பதில் மிக உறுதியான நிலைப்பாட்டை கொண்ட, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் முதன்மைப் போராளிகளில் ஒருவராக விளங்குகிறார்.
இன்று போல என்றும், அவரது தலைமைத்துவத்திற்கும், செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக நாம் நிற்போம். எமது இனம் தனது உரிமைகளை பெற்றிட அவருடன் இணையாய் நின்று செயற்படுவோம்.
அனைத்துத் தோழர்கள் சார்பாக,
ஊடகப் பிரிவு
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
10.09.2024