மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் பிணை அனுமதி கிடைக்கப்பெற்ற முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்றைய தினம் விளக்கமறியலில் இருந்து வெளியேறினார். முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு வழக்குகள் கொழும்பு மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விசாரணைகளுக்கமைவாக, அடுத்த மாதம் 3 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். Read more

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு இன்று(12) தீர்மானிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களும் இன்று மாலை 06 மணிக்கு முன்னர் பல்கலைக்கழகத்திலிருந்து வௌியேற வேண்டுமென ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பத்மலால் எம் மானகே பிற்பகலில் அறிவித்துள்ளார். விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களும் இன்று மாலை 06 மணிக்கு முன்னர் வௌியேற வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
10.9.2024 பொது வேட்பாளருக்கு ஆதரவாக வடமராட்சி, மாலி சந்தியில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. மேலும், திருக்கோணமலை வரோதயநகரில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குக் கைப்பேசிகளை எடுத்துச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டிருப்பதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார். அஞ்சல் வாக்கினைப் பதிவு செய்து அந்த வாக்குச் சீட்டை படமெடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இன்றியும் வாக்கினைப் பதிவு செய்ய முடியும் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புகின்றவர்கள் மாத்திரம் அன்றி உள்நாட்டிலேயே வசிக்கின்றவர்களும் வாக்காளர் அட்டை இன்றி வாக்களிக்க முடியும்.
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா டிப்போ ஊழியர்கள் இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமது ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா புதிய பஸ் நிலையத்தில் கடமையில் இருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் நடத்துனர் மற்றும் ஊழியர்கள் மீது கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பஸ் ஊழியர்கள் தாக்குதலை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியல் நிச்சயமற்ற தன்மையை அடிப்படையாகக் கொண்டு, இறையாண்மை முறிகளை கொள்வனவு செய்துள்ள முதலீட்டாளர்கள் அவற்றை விற்பனை செய்யும் நிலைமை உருவாகியுள்ளதாக உலகின் முன்னணி பொருளாதார செய்தி வழங்குநரான புளும்பேர்க்(Bloomberg) இணையத்தளம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காரணமாக நாட்டில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மையை கருத்திற்கொண்டு இலங்கை தொடர்பில் தமது பங்களிப்பை குறைப்பதற்கு முதலீட்டாளர்கள் தீர்மானித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.