மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் பிணை அனுமதி கிடைக்கப்பெற்ற முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்றைய தினம் விளக்கமறியலில் இருந்து வெளியேறினார். முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு வழக்குகள் கொழும்பு மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விசாரணைகளுக்கமைவாக, அடுத்த மாதம் 3 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் இருந்து வெளியேறினார்.
தரங்குறைந்த மருந்து இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் 8 மாதங்களாக கெஹெலிய ரம்புவல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.