யாழ்ப்பாணம் மானிப்பாயில் நடைபெற்ற சஜித் ஆதரவு மக்கள் கூட்டத்தில் வைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேடையேறினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்குத் தீர்மானித்திருந்தது.
இதனையடுத்து அந்தத் தீர்மானம் தொடர்பாகக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டிருந்தாலும் அந்தத் தீர்மானத்தில் எந்த மாற்றங்களும் இல்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்தது.
அத்துடன் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்தை முன்கொண்டு செல்லும் பொறுப்பு தமக்கு இருக்கிறது என்று கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் இன்றையதினம் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாகத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இன்று யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக மேடையேறி உரையாற்றி இருந்தார்.
கட்சியின் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மற்றும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் மேடை ஏறியிருந்தனர்.
இதன்போது தமிழ் தேசியத்தின் சார்பில் பொதுவேட்பாளராக பா. அரியநேத்திரனுக்கு எதிராக கடும் பிரசாரத்தில் எம்.ஏ சுமந்திரன் ஈடுபட்டுள்ளார்.