செயலதிபர் அமரர் தோழர். க. உமாமகேஸ்வரன் அவர்களின் தீர்க்கதரிசனம் மிக்க ஆலோசனையுடன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இன் மக்கள் முன்னணியாக உருவாக்கப்பட்ட ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு இன்று முப்பத்தாறு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

சிதைந்த தேசமாக மாறி வரும் இலங்கைத் தீவு செழுமை பெற வேண்டுமாயின், சமஷ்டி அடிப்படையிலான சமூக, அரசியல் கட்டமைப்பொன்றே உருவாக்கப்பட வேண்டும் எனும் உறுதியான கொள்கையுடன், சிங்கள பௌத்த பேரினவாதத்தால் கடந்த முக்கால் நூற்றாண்டு காலமாக எமது மக்கள் மீது திட்டமிட்ட வகையில் திணிக்கப்படுகின்ற அனைத்து இன அழிப்பு நடவடிக்கைகளைகளுக்கும் முகம் கொடுக்கக்கூடியவர்களாக, எம்மை நாம் மேலும் வலுப்படுத்திக் கொள்வோம்.
தேசிய இனப் பிரச்சினைத் தீர்வுக்கான போராட்டம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தப்படுகின்ற சூழ்நிலையில், மக்களின் வளங்களைப் பாதுகாத்தல். அதன் மூலம் மக்களின் வாழ்வைப் பாதுகாத்தல், மற்றும் பண்பாட்டு உரிமைகளை பாதுகாத்தல், பொருளாதார நெருக்கடிகளில் இருந்து அவர்களை மீட்டெடுத்தல் என அனைத்துக்குமாக எம்மை நாம் தகவமைத்துக் கொள்வோம்.
சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் பிரகாரமும், தேசிய இனமொன்றிற்கான சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையிலும், இலங்கைத்தீவின் தமிழ் மக்கள் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்ள ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினராகிய நாம் தொடர்ந்தும் ஒற்றுமையுடனும் பலத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவோம்.
ஊடகப் பிரிவு
18.09.2024