சர்வதேச இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் முடிவு மக்களின் அடிப்படை மனித உரிமையை மீறுவதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவினால் இந்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவில் நிதியமைச்சர் நிதியமைச்சின் செயலாளர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட தரப்பினர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் ஊடாகப் பெற்றுக் கொள்ளப்படும் கடனிற்காக 5 முதல் 7 சதவீதத்திற்கு இடைப்பட்ட வட்டி வீதம் அறவிடப்படுவதாக மனுதாரர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.