சர்வதேச நாணய நிதியத்துடன் நீட்டிக்கப்பட்ட கடன் திட்டம் தொடரும் என்றும்இ கடன் மறுசீரமைப்பு தொடர்பான சலுகைகள் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் இதனைத் தெரிவித்தார். Read more
நாட்டின் 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் அவர்கள் இன்று பிற்பகல் சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி மத்திய மாகாணத்திற்கான புதிய ஆளுநராக பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சரத் அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண புதிய ஆளுநராகஇ யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இலத்திரனியல் முறையில் விசா விநியோகிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 2ஆம் திகதி பிறப்பித்த இடைக்கால தடையுத்தரவிற்கு அமைவாக செயற்படத் தவறியதால் அவரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட 84 அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதுதவிர, சுயேட்சை குழுக்கள் சார்பிலும் வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், ஒரு கட்சியின் சார்பில் மாவட்ட ரீதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் எண்ணிக்கை தொடர்பில், எதிர்வரும் நாட்களில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பொருளாதார பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி சுபீட்சமான எதிர்காலத்தை ஏற்படுத்துவார் என சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது. புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்த சர்வதேச நாணய நிதியம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதி அனுரகுமார திஸா நாயக்கவின் கையெழுத்துடனான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்று, புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகும். ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி நண்பகல் வரையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.