சர்வதேச நாணய நிதியத்துடன் நீட்டிக்கப்பட்ட கடன் திட்டம் தொடரும் என்றும்இ கடன் மறுசீரமைப்பு தொடர்பான சலுகைகள் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்படுவதற்கு முன்னர் பொருளாதாரம் நிலையான நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.