26.09.2000ல் மரணித்த தோழர் தேவன் (கந்தையா சண்முகராஜா) அவர்களின் 24ம் ஆண்டு நினைவுகள்…
Posted by plotenewseditor on 26 September 2024
Posted in செய்திகள்
26.09.2000ல் மரணித்த தோழர் தேவன் (கந்தையா சண்முகராஜா) அவர்களின் 24ம் ஆண்டு நினைவுகள்…
Posted by plotenewseditor on 26 September 2024
Posted in செய்திகள்
மலர்வு. – 06.11.1965Posted by plotenewseditor on 26 September 2024
Posted in செய்திகள்
இன்று நள்ளிரவு முதல் பழைய முறைப்படி வீசா வழங்கும் நடைமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வீசா வழங்கும் நடைமுறை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமையால் குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இதனை அடுத்து அந்த செய்முறையை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் வீசா வழங்கலில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது பழைய முறைமையின் அடிப்படையிலேயே வீசா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Posted by plotenewseditor on 26 September 2024
Posted in செய்திகள்
கடந்த ஆட்சிகளில் பயன்படுத்திய சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது வருத்தமளிப்பதாகவும் இது தொடர்பில் முழுமையான மீளாய்வு நடத்தி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார். Read more
Posted by plotenewseditor on 26 September 2024
Posted in செய்திகள்
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கி வாழ்த்து தெரிவித்துள்ளது. உலக வங்கியின் தெற்காசிய வலயத்தின் தலைவர் மார்டின் ரயிஸர் சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் வலய உபதலைவர் ரிகார்டோ புலிட் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 26 September 2024
Posted in செய்திகள்
இலங்கை மின்சார சபையின் (CEB) தலைவராக கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.
Posted by plotenewseditor on 26 September 2024
Posted in செய்திகள்
நாடாளுமன்ற காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 85 பேருக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு இல்லாமல் போயுள்ளது. 1977ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியக் கொடுப்பனவு சட்டத்துக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஓய்வூதியக் கொடுப்பனவைப் பெற வேண்டுமாயின் நாடாளுமன்ற உறுப்பினராக 5 வருடங்கள் செயற்பட்டிருக்க வேண்டும். Read more
Posted by plotenewseditor on 26 September 2024
Posted in செய்திகள்
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பரீட்சை தொடர்பில் தமது ஆணைக்குழுவிற்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். Read more