பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பரீட்சை தொடர்பில் தமது ஆணைக்குழுவிற்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக பரீட்சைகள் ஆணையாளர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.