தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான கூட்டம், இன்று யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக உரையாடப்பட்டது. நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளான தமிழ் மக்கள் பொதுச்சபையானது, தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதா இல்லையா என்ற முடிவை எடுப்பதற்கு சனிக்கிழமை வரை அவகாசத்தை கேட்டுள்ளது.
கூட்டத்தின் முடிவில் தமிழ்ப் பொது வேட்பாளரும் கலந்து கொண்ட ஊடகச் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது.