முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாளைமறுதினம்(30) கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக பதில் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள பிரமுகர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். Read more
புதிய அமைச்சுகளுக்கான விடயதானங்கள் மற்றும் பொறுப்புகளை பட்டியலிட்டு அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டது. பாதுகாப்பு படைகளின் தலைமை அலுவலகம், இராணுவம், கடற்படை, விமானப்படை, அரச புலனாய்வு சேவை, இடர் முகாமைத்துவ நிலையம், வளிமண்டலவியல் திணைக்களம் உள்ளிட்ட 26 நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் தமது 74 ஆவது வயதில் காலமானார். 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 ஆம் திகதி பிறந்த குமார வெல்கம இறுதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக களுத்துறை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார். 1984 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர் பல்வேறு அமைச்சுப் பதவிகளையும் வகித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட நியமிக்கப்பட்டுள்ளார். சட்டத்தரணி சங்கத்தின் சட்டத்தரணிகள் பேரவை இன்று(28) கூடிய போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சட்டத்தரணி அனுர மெத்தேகொட, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவராக பதவி வகித்தார். ஜனாதிபதி சட்டத்தரணி ராஸிக் ஸருக், சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.