கட்சியின் யாப்பில் அவசியமான சில திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் பொதுச்சபை உறுப்பினர்களுக்கான விசேட கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது. நூற்றுக்கும் அதிகமான பொதுச்சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இன்றைய விசேட கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் தலைமை தாங்கினார். செயலாளர், உப செயலாளர், உப பொருளாளர், ஆகிய பதவிகள் சம்பந்தமாகவும், கட்சியின் உயர் அங்கத்தில் பெண் உறுப்புரிமையை உறுதிப்படுத்தல் சம்பந்தமாகவும், பொதுச்சபையின் காலம் சம்பந்தமாகவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, மத்தியகுழுவில் சில நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமாகவும் கலந்துரையாடல் நடைபெற்றது. இறுதியில் கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது.
