Header image alt text

13.09.1987 இல் கிரானில் மரணித்த தமிழ் இளைஞர் பேரவைச் செயலரும், கழக வானொலி நிலைய இயக்குனரும்,” தமிழன் குரல்” பிரச்சார இதழின் ஆசிரியரும் , திம்புவின் தலைமைப் பேச்சாளரும் கழகத்தின் அரசியல் செயலருமான தோழர் இரா.வாசுதேவா,
ஏகாதிபத்திய எதிர்ப்பாளரும், ” நிர்மாணம்” தத்துவ இதழின் ஆசிரியரும், கழகத்தின் படைத்துறைச் செயலருமான தோழர் கண்ணன் (சோதீஸ்வரன் – யாழ்ப்பாணம்)

Read more

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுபெற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குறித்த தினத்தில் மாலை 4 மணிவரை வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் 13,417 வாக்களிப்பு நிலையங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுபவரை மக்களே தீர்மானிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தேர்தலின் பின்னரே அடுத்த மீளாய்வு மேற்கொள்ளப்படும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகப் பேச்சாளர் Julie Kozack இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வு காலம் தொடர்பில் தேர்தலின் பின்னரான புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் பிணை அனுமதி கிடைக்கப்பெற்ற முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்றைய தினம் விளக்கமறியலில் இருந்து வெளியேறினார். முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு வழக்குகள் கொழும்பு மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விசாரணைகளுக்கமைவாக, அடுத்த மாதம் 3 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். Read more

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு இன்று(12) தீர்மானிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களும் இன்று மாலை 06 மணிக்கு முன்னர் பல்கலைக்கழகத்திலிருந்து வௌியேற வேண்டுமென ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பத்மலால் எம் மானகே பிற்பகலில் அறிவித்துள்ளார். விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களும் இன்று மாலை 06 மணிக்கு முன்னர் வௌியேற வேண்டுமென அவர் கூறியுள்ளார். Read more

10.9.2024 பொது வேட்பாளருக்கு ஆதரவாக வடமராட்சி, மாலி சந்தியில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. மேலும், திருக்கோணமலை வரோதயநகரில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. Read more

ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குக் கைப்பேசிகளை எடுத்துச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டிருப்பதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார். அஞ்சல் வாக்கினைப் பதிவு செய்து அந்த வாக்குச் சீட்டை படமெடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இன்றியும் வாக்கினைப் பதிவு செய்ய முடியும் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புகின்றவர்கள் மாத்திரம் அன்றி உள்நாட்டிலேயே வசிக்கின்றவர்களும் வாக்காளர் அட்டை இன்றி வாக்களிக்க முடியும். Read more