இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா டிப்போ ஊழியர்கள் இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமது ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா புதிய பஸ் நிலையத்தில் கடமையில் இருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் நடத்துனர் மற்றும் ஊழியர்கள் மீது கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பஸ் ஊழியர்கள் தாக்குதலை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. Read more
இலங்கையின் அரசியல் நிச்சயமற்ற தன்மையை அடிப்படையாகக் கொண்டு, இறையாண்மை முறிகளை கொள்வனவு செய்துள்ள முதலீட்டாளர்கள் அவற்றை விற்பனை செய்யும் நிலைமை உருவாகியுள்ளதாக உலகின் முன்னணி பொருளாதார செய்தி வழங்குநரான புளும்பேர்க்(Bloomberg) இணையத்தளம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காரணமாக நாட்டில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மையை கருத்திற்கொண்டு இலங்கை தொடர்பில் தமது பங்களிப்பை குறைப்பதற்கு முதலீட்டாளர்கள் தீர்மானித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
11.09.1987 இல் வவுனியாவில் மரணித்த தோழர் நவநீதன் ( இராஜலிங்கம் -அனந்தர்புளியங்குளம்) அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 3 பேருக்குப் பிணையில் செல்ல மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் மேற்படி சந்தேகநபர்கள் கடந்த பெப்ரவரி 2ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். சந்தேக நபர்கள் இன்று புதன்கிழமை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல, சுகாதாரம், சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்த காரணத்தினால் சுகாதாரம், சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த கீதா குமாரசிங்க நேற்று(10) பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்கை இதுவரை அளிக்காதவர்கள் இன்றும் நாளையும் வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காலை 8.30 முதல் மாலை 4.30 வரை தத்தமது மாவட்ட செயலக அலுவலகத்தில் தபால்மூல வாக்கை அளிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தபால்மூலம் வாக்களிக்க தகுதிபெற்ற அரச உத்தியோகத்தர்கள் வாக்களிப்பதற்காக இதற்கு முன்னர் 4, 5 மற்றும் 06 ஆம் திகதிகளில் அவரவர் பணிபுரியும் அரச நிறுவனங்களில் அமைக்கப்பட்டிருந்த தபால்மூல வாக்களிப்பு நிலையங்களில் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டிருந்தது.
80 வீத வாக்குச்சீட்டுகள் மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விசேட பாதுகாப்புடன் அவை அனுப்பி வைக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணிகளை இவ்வார இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் இந்நாட்களில் முன்னெடுக்கப்படுகின்றன.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான வழிகாட்டல் வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சை வினாத்தாள்களின் வினாக்களை வழங்குதல் அல்லது அதனை ஒத்த வினாக்களை வழங்குவதாக துண்டுப்பிரசுரம் விநியோகித்தல் போன்றவை அல்லது அவற்றை வைத்திருத்தல் என்பனவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.