Header image alt text

09.09.1991 இல் நாவற்குடாவில் மரணித்த தோழர் ரஞ்சன் ( மயில்வாகனம் சற்குணராஜா-மட்டக்களப்பு) அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

இலங்கையின் காவல்துறை மற்றும் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொள்கின்ற துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இன்று கவலை தெரிவிக்கப்பட்டது. மனித உரிமைகள் பேரவையின் 57ஆம் அமர்வு இன்று ஜெனீவாவில் ஆரம்பமானது. இதன்போது இலங்கை தொடர்பான தமது வாய்மூல அறிக்கையை முன்வைத்து உரையாற்றிய மனித உரிமைகள் ஆணையாளர் வொல்கர் டர்க் கடந்த காலங்களிலிருந்து இலங்கை விடுபட்டு புதிய நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார். Read more

காங்கேசன்துறைக்கும் – நாகபட்டினத்துக்குமிடையில் இடம்பெறுகின்ற பயணிகள் கப்பல் சேவையை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிவகங்கை என்ற இந்தக் கப்பல் சேவை போதிய பயணிகளின் எண்ணிக்கையின்மை காரணமாக வாராந்தம் 3 தினங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. எனினும் தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இம்மாதம் 21ஆம் திகதிக்குப் பின்னர் வாராந்தம் 4 நாட்கள் இந்த கப்பல் சேவை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளை மூடுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவால் கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு பின்னர், வாக்கெண்ணும் நிலையங்களை தயார்ப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்களிப்பு மையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் தயார்ப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளது. Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்தவகையில் தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட தேர்தல் செயலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது. கிராம உத்தியோகத்தர் அல்லது பெருந்தோட்ட முகாமையாளர் ஊடாக இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜே.வி.பியின் வழிமுறைகளைப் பின்பற்றி தென்னிலங்கை மக்களையும் வடக்கு மக்களையும் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். பால்நிலை சமத்துவத்தின் அடிப்படையிலேயே எதிர்கால வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். Read more

வௌிநாட்டு விடுமுறை நிறைவடைந்த பின்னரும் உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காத அரச ஊழியர்கள் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள் என பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சு செயலாளரின் கையொப்பத்துடன் சுற்றுருபம் வௌியிடப்பட்டுள்ளது. Read more

மாவை சேனாதிராஜாவை தாங்கள் மதிப்பதாகவும் எனினும் தம்மைக் கேட்டே அனைத்து தீர்மானங்களையும் எடுக்க வேண்டும் என அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இலங்கைத் தமிழரசு கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

07.09.1987இல் தம்பனையில் மரணித்த தோழர்கள் ராமு (சா.அகிலன் – ஈச்சந்தீவு), தமிழ்ச்செல்வன்( சுழிபுரம்),ஹென்றி (முருகானந்தம் – பாலையூற்று), தமிழ் வேந்தன்(சுழிபுரம்), டியூக் (ஹரிச்சந்திரன்-கன்னியா), மனோரஞ்சன்(கனகசுந்தரம் – பளை), ஞானராஜ் ( பன்குளம்), கரன்( மட்டக்களப்பு), குமார் ( தீவுப்பகுதி), ரகுன் (யாழ்நகர்), ரஞ்சன் (திருகோணமலை), சோதிராஜ்(மட்டக்களப்பு), ஜீவா (மட்டக்களப்பு) சிறீகாந்த் (அடம்பன்தாழ்வு) ஆகியோரினது 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..