புளொட் ஜெர்மன் கிளை அமைப்பாளர் தோழர் பவானந்த் அவர்களது செல்வப்புதல்வியான மணமகள் சுபாங்கி, மணமகன் மார்க்கோ ஆகியோரின் திருமண நாளை (07.09.2024) முன்னிட்டு, புளொட் ஜெர்மன் கிளையின் அனுசரணையில் இன்று வற்றாப்பளைப் பிரதேசத்தில் விசேட மதிய விருந்தோம்பல் நிகழ்வு இடம்பெற்றது. Read more
மலர்வு : 1960.10.25
அஞ்சல் மூல வாக்களிப்பின் போதுஇ வேட்பாளர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டின் படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சம்பவம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை நடத்துமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழு இந்த முறைப்பாட்டை காவல்துறையில் பதிவு செய்துள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சீனாவில் உள்ள குழந்தைகளை வெளிநாடுகளில் உள்ளவர்கள் தத்தெடுப்பது முழுமையாக நிறுத்தப்படும் என அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களாகச் சீனக் குழந்தைகள் வெளிநாடுகளில் உள்ளவர்களால் தத்தெடுக்கப்பட்டனர். 1992ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் சீனக் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் பெண் குழந்தைகளே அதிகமாகத் தத்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளைக் கோரும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க முதலில் தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகத் தமிழ் மக்களின் ஆதரவைக் கோருவதாகத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.
06.09.1987 இல் மன்னாரில் மரணித்த தோழர் சேகர் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.

ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற உள்நாட்டு வைத்தியர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு மருத்துவ முறையில் பாரம்பரிய மருத்துவர்களும் ஆயுர்வேத பீடத்தில் பட்டம் பெற்றவர்களும் உள்ளனர். கடந்த காலங்களில் சுதேச மருத்துவம் மிகவும் வெற்றிகரமாகக் காணப்பட்டது.
முல்லைத்தீவு – மாங்குளம் – துணுக்காய் பகுதியில் நில கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 4 பணியாளர்கள் காயமடைந்துள்ளனர். நிலக்கண்ணி வெடிகளை அகற்ற முற்பட்ட போது ஏற்பட்ட வெடிப்பில் நேற்றைய தினம் (05) குறித்த நால்வரும் காயமடைந்தனர். காயமடைந்த 4 பேரும் பெண் பணியாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த நால்வரில் மூவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.