அரசியலமைப்பின் 107ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான 4 புதிய ரூnடிளி;நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே.எம்.ஜி.எச்.குலதுங்கஇ டி.தொடவத்தஇ மற்றும் ஆர்.ஏ.ரணராஜா ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான புதிய நீதியரசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் முன்னாள் சிரேஷ்ட பிரதி மன்றாடியர் நாயகம் எம். சி. எல். பி. கோபல்லவவும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். Read more
மியன்மாரில் ஆயுதம் தாங்கிய குழுவொன்றின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர். குறித்த 20 இலங்கையர்களும் நேற்று நாட்டை வந்தடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஏதிலிகளுக்கான அமைப்பின் அனுசரணையில் தாய்லாந்தின் பெங்கொக்கில் இருந்து அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
05.09.1986 இல் மரணித்த தோழர் ஐயர்(சுகுணன்)-ஆறுமுகம் சடாவதனன் – சுதுமலை) அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
4 இராஜாங்க அமைச்சர்கள் உடன் அமுலாகும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹொன் பிரியதர்ஷன டி சில்வா நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோரே இவ்வாறு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வதேச காவல்துறையினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நாடு கடத்தப்பட்டுள்ளார். சீனாவில் பாரியளவில் பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் 28 வயதுடைய சீன பிரஜையே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்காக பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் தலைவராக பிரதமர் தினேஸ் குணவர்தனவும் செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக அதிவேக நெடுஞ்சாலை நிர்மாண பணிகளின் போது கொழும்பு துறைமுக காவல்நிலையத்துக்கு முன்பாக உள்ள சுற்றுவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பில்அகழ்வு பணி இன்று (05) ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று (04) உத்தரவிட்டுள்ளார். துறைமுக காவல்துறையினரின் கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்காமல் நடுநிலை வகிக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளார். இம்முறை தாம் பல்வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் வௌிவந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஞ்சல் மூல வாக்களிப்பின் போது ஏதாவது சம்பவங்கள் பதிவாகுமாயின் அது தொடர்பில் உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி அல்லது மாவட்டச் செயலாளருக்கு அறியப்படுத்த முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்னாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் உரிய அரச அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் தொலைப்பேசியின் ஊடாகவும் அவ்வாறான தகவல்களை வழங்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்னாயக்க தெரிவித்துள்ளார்.