கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் எனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது அந்த நடவடிக்கைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக அதன் உபதலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார். Read more
ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2095 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அதேநேரம் நேற்றைய தினம் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 154 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் புதிய பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய கடவுச்சீட்டுகள் நாட்டுக்குக் கிடைக்குமென குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 50,000,00 புதிய கடவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் அதன் முதல் தொகுதியாக 50,000 கடவுச்சீட்டுகள் நாட்டுக்குக் கிடைக்குமென குடிவரவு – குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது. அவை கிடைத்தவுடன் தற்போது கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு கிட்டுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் 2024
02.09.1999ல் படுகொலை செய்யப்பட்ட, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னாள் உபதலைவரும், இராணுவத் தளபதியுமான தோழர் மாணிக்கதாசன் (நாகலிங்கம் மாணிக்கம் ராஜன் – யாழ்ப்பாணம்) மற்றும் தோழர்கள் இளங்கோ (தர்மலிங்கம்,தேவராஜா-புளியங்குளம்), வினோ (முருகேசு குணரத்தினம்- மட்டக்களப்பு) ஆகியோரின் 25ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம் அவர்களின் 39ம் ஆண்டு நினைவஞ்சலி இன்றையதினம் (02) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள அவரது நினைவுத் தூபியில் இன்று காலை 7மணியளவில் வலிதெற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் அன்னதானம் றிச்சாட் தவப்பிரகாசம் தலைமையில் குறித்த நினைவஞ்சலி இடம்பெற்றது. இதன்போது நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
தோழர்கள் மாணிக்கதாசன், இளங்கோ, வினோ ஆகியோரின் நினைவாக தோழர் சிவாவின் ஒழுங்கமைப்பில் இன்று வவுனியா வரோட் அமைப்பிலுள்ள விசேட தேவைக்குட்பட்ட பிள்ளைகளுக்கு மதிய போசனம் வழங்கப்பட்டது.
தோழர்கள் மாணிக்கதாசன், இளங்கோ, வினோ ஆகியோரின் நினைவாக தோழர் சிவாவின் ஒழுங்கமைப்பில் வவுனியா கோயில்குளம் நினைவில்ல வளாகத்தில் இன்று தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு குளிர்பானம் வழங்கப்பட்டது.