Header image alt text

02.09.1985ல் கொல்லப்பட்ட தமிழரசு கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் தலைவர்களில் ஒருவரும், மானிப்பாய் தொகுதியின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணிDPLF) ஆகியவற்றின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தந்தையுமான அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

இதயபூர்வ அஞ்சலிகள்-

Posted by plotenewseditor on 2 September 2024
Posted in செய்திகள் 

இவர் 1980களில் திருகோணமலை மாவட்டத்தில் காந்தீயத்தின் முக்கிய செயற்பாட்டாளராகவும், மூதூர் பகுதி காந்தீய பொறுப்பாளராகவும், திருமலை மாவட்டத்தில் புளொட்டின் ஆரம்பகால உறுப்பினராகவும், மூதூர்ப் பகுதி அமைப்பாளராகவும் செயற்பட்டவர். 1980களில் இருந்தே காந்தீயம், புளொட் ஆகியவற்றின் செயற்பாடுகளில் தன்னையும் இணைத்துக் கொண்டு தனது குடும்பத்தையும் பங்கெடுக்கச் செய்த இவர் மறைந்த தோழர் பார்த்தன் (இரா.ஜெயச்சந்திரன்) அவர்களோடு தோளோடு தோள்நின்று செயற்பட்டவர்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) மத்தியகுழுக் கூட்டம் இன்று (01.09.2024) ஞயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் மெய்நிகர் வழியில் இடம்பெற்றது. இதன்போது கட்சியின் நிர்வாக விடயங்கள் பல ஆராயப்பட்டு அவை தொடர்பான தீர்மானங்கள் எட்டப்பட்டதுடன், சமகால அரசியல் நிலைமைகள், ஜனாதிபதித் தேர்தல், பொது வேட்பாளருக்கான பிரச்சாரப் பணிகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இன்று இடம்பெற்ற தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்துக்கான ஆலோசனை கூட்டத்தின்போது, புதிய கட்டமைப்பு அம்பாறை மாவட்டத்துக்காக உருவாக்கப்பட்டது. இக் கூட்டமானது மாலை 6 மணி தொடக்கம் 7:30 வரை இடம்பெற்றது. Read more