Header image alt text

27.09.1987இல் கல்நாட்டினகுளத்தில் மரணித்த தோழர்கள் காஸ்ட்ரோ (முல்லைத்தீவு), நந்தீஸ் ( முல்லைத்தீவு), கம்பன் (திருநகர்) ஜெயராஜ் உள்ளிட்ட ஏழு தோழர்களினதும் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..

இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலியக் களஞ்சிய முனையத்தின் புதிய தலைவராக டி.எஸ்.ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார்.  டி.எஸ்.ராஜகருணா இதற்கு முன்னர் முத்துராஜவெல எரிபொருள் முனையத்தின் முகாமையாளராக செயற்பட்டார். இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக பேராசிரியர் மயூர நெத்திகுமாரகே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிப்பதற்கான வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. Read more

லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. அங்கு வசிக்கும் இலங்கையர்களுடன் தூதரம் நெருங்கிய தொடர்பிலுள்ளதாகவும் தூதுவர் கபில ஜயவீர குறிப்பிட்டுள்ளார். சுமார் 7,600 இலங்கை பணியாளர்கள் லெபனானில் பணி புரிந்து வருவதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் நாட்டின் தெற்குப் பகுதிகளில் வசிப்பதாகவும் அவர் கூறினார். Read more

26.09.2000ல் மரணித்த தோழர் தேவன் (கந்தையா சண்முகராஜா) அவர்களின் 24ம் ஆண்டு நினைவுகள்…

மலர்வு. – 06.11.1965
உதிர்வு – 25.09.2024
மன்னார் நானாட்டானை பிறப்பிடமாகவும், வவுனியா எல்லப்பர் மருதன்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட தோழர் ராவணன் (கறுப்பையா முருகையா) அவர்கள் சுகயீனம் காரணமாக நேற்றிரவு வவுனியா வைத்தியசாலையில் மரணமெய்தினார்.

Read more

இன்று நள்ளிரவு முதல் பழைய முறைப்படி வீசா வழங்கும் நடைமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வீசா வழங்கும் நடைமுறை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமையால் குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இதனை அடுத்து அந்த செய்முறையை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் வீசா வழங்கலில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது பழைய முறைமையின் அடிப்படையிலேயே வீசா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த ஆட்சிகளில் பயன்படுத்திய சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது வருத்தமளிப்பதாகவும் இது தொடர்பில் முழுமையான மீளாய்வு நடத்தி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார். Read more

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கி வாழ்த்து தெரிவித்துள்ளது. உலக வங்கியின் தெற்காசிய வலயத்தின் தலைவர் மார்டின் ரயிஸர் சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் வலய உபதலைவர் ரிகார்டோ புலிட் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர். Read more

இலங்கை மின்சார சபையின் (CEB) தலைவராக கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.