Header image alt text

நாடாளுமன்ற காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 85 பேருக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு இல்லாமல் போயுள்ளது. 1977ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியக் கொடுப்பனவு சட்டத்துக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஓய்வூதியக் கொடுப்பனவைப் பெற வேண்டுமாயின் நாடாளுமன்ற உறுப்பினராக 5 வருடங்கள் செயற்பட்டிருக்க வேண்டும். Read more

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பரீட்சை தொடர்பில் தமது ஆணைக்குழுவிற்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். Read more

சர்வதேச நாணய நிதியத்துடன் நீட்டிக்கப்பட்ட கடன் திட்டம் தொடரும் என்றும்இ கடன் மறுசீரமைப்பு தொடர்பான சலுகைகள் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் இதனைத் தெரிவித்தார். Read more

நாட்டின் 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் அவர்கள் இன்று பிற்பகல் சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி மத்திய மாகாணத்திற்கான புதிய ஆளுநராக பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சரத் அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண புதிய ஆளுநராகஇ யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். Read more

குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இலத்திரனியல் முறையில் விசா விநியோகிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 2ஆம் திகதி பிறப்பித்த இடைக்கால தடையுத்தரவிற்கு அமைவாக செயற்படத் தவறியதால் அவரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more

அங்கீகரிக்கப்பட்ட 84 அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதுதவிர, சுயேட்சை குழுக்கள் சார்பிலும் வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், ஒரு கட்சியின் சார்பில் மாவட்ட ரீதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் எண்ணிக்கை தொடர்பில், எதிர்வரும் நாட்களில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும். Read more

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பொருளாதார பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி சுபீட்சமான எதிர்காலத்தை ஏற்படுத்துவார் என சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது. புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்த சர்வதேச நாணய நிதியம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது. Read more

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதி அனுரகுமார திஸா நாயக்கவின் கையெழுத்துடனான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்று, புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகும். ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி நண்பகல் வரையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்றைய தினம் பதவியேற்றது. இந்நிலையில் புதிய அமைச்சரவைக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மஹிந்த சிறிவர்தன நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை அமுலாக்கம், திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். Read more

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்றைய தினம் பதவியேற்றுள்ளது. இதன்படி பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய அமைச்சு பொறுப்புகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சுக்கு மேலதிகமாக, நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, வலுசக்தி, விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள் ஆகிய அமைச்சுகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. Read more