ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்றைய தினம் பதவியேற்றுள்ளது. இதன்படி தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்துக்கு பல அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. புத்தசாசன சமய மற்றும் கலாசார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் பொதுசன ஊடக அமைச்சு, போக்குவரத்து பெருந்தெருக்கள் துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு வெளிவிவகார அமைச்சு, Read more
		    
மேல் மாகாண ஆளுநரான மார்ஷல் ஒஃப் த எயார் ரொஷான் குணதிலக்கவும் பதவி விலகியுள்ளார். அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கு முன்னதாக 7 மாகாண ஆளுநர்கள், தங்களது பதவியிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கலாநிதி ஹரினி அமரசூரிய, புதிய பிரதமராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார். பிரதமர் பதவிக்கு மேலதிகமாக அவர் நீதி, கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீட்டு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம்(IMF) தெரிவித்துள்ளது. இதுவரை ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள வெற்றியின் அடிப்படையில் இலங்கையின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்வது தொடர்பில் நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளரொருவர் குறிப்பிட்டுள்ளார். 
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இனி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடவோ அல்லது தேசிய பட்டியல் ஊடாக உள்வரவோ மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க தேசிய விடயங்களில் கட்சியின் ஆலோசகராக மாத்திரம் செயற்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து மாபெரும் கூட்டணி ஒன்றை உருவாக்க முன்வருமாறு தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அதன் பிரதித் தலைவர் ருவான் விஜேயவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.
ஆட்சி மாற்றத்தை அடுத்து முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மாகாண ஆளுநர்கள் பதவி விலகி வருகின்றனர். அந்த வகையில் வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸும் தற்போது பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.
புதிய பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்தா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகமகே தமது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவர் தமது பதவி விலகல் கடிதத்தை நேற்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். ஊவா மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய ஏ.ஜே.எம் முஸம்மில் பதவி விலகியதை அடுத்து அந்த பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அநுர விதானகமகே நியமிக்கப்பட்டிருந்தார். இதேவேளை மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவும் தமது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுணாராச்சி பெயரிடப்பட்டுள்ளார். தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.