Header image alt text

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளை தெரிவிப்பதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனூடாக தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வாக்கெடுப்பின் போதான சட்ட விரோதமான செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இராஜகிரிய தேர்தல் செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவுக்கு இது தொடர்பான முறைப்பாடு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மக்களிடம் கோரியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நாளையுடன் (18) நிறைவடையவுள்ள நிலையில்இ கொழும்பு நுகேகொடை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் பிரதான வேட்பாளர்களின் இறுதி பிரசாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரசாரக் கூட்டம் கிராண்ட்பாஸ் – பலாமரச் சந்தியிலும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டம் மருதானை- டவர் மண்டபத்துக்கு முன்பாகவும் நாளை பிற்பகல் இடம்பெறவுள்ளன. Read more

நிறைவடைந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் முதலாம் பாகத்திலிருந்து மூன்று வினாக்களை நீக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் சில வினாக்கள் வட்ஸ்அப் செயலிமூலம் பகிரப்பட்டதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது. குறித்த விடயம் தொடர்பில் வினாத்தாளைத் தயாரித்த பரீட்சை சபையுடன் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார். Read more

ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக நாட்டிற்கு வந்துள்ள சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த சந்திப்பானது இன்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் இடம்பெறும் முதலாவது சந்திப்பு இதுவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்லேகலை திறந்தவெளி சிறைச்சாலையில் 11 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். பொரளை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா ஆலோசனை வழங்கியுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால், இலங்கைக்கு சுற்றுலா செல்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில், தமது சுற்றுப்புறங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. Read more

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதி பொது வேட்பாளர் அரியநேந்திரனை ஆதரிக்கும் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பொதுக்கூட்டம் நேற்று (16.09.2024) யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது, பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், க. அருந்துவபாலன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணம் மானிப்பாயில் நடைபெற்ற சஜித் ஆதரவு மக்கள் கூட்டத்தில் வைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேடையேறினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்குத் தீர்மானித்திருந்தது. Read more