Header image alt text

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் வசாவிளான் மத்திய கல்லூரியிலிருந்து அச்சுவேலி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்குப் பின்னர் மக்கள் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. இன்று  காலை 6 மணி முதல் இந்த வீதி மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டிலிருந்த குறித்த பகுதி வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் முயற்சிக்கமைய மக்கள் பாவனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியில் காணப்பட்ட வீதித்தடைகள் இன்று காலை முதல் பாதுகாப்பு தரப்பினரால் அகற்றப்பட்டுள்ளன.

பதுளை – துன்ஹிந்த 4ஆம் கட்டைப் பகுதியில் பஸ் விபத்திற்குள்ளானதில் 2 பேர் பலியாகியுள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த 41 பேர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் சூரியவெவ தெற்கு வளாகத்திலிருந்து மாணவர் குழுவொன்றை ஏற்றிச் சென்ற குறித்த பஸ் இன்று காலை விபத்திற்குள்ளானதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்தார். Read more

இலங்கைக்கான ஒஸ்ட்ரிய தூதுவர் கத்தரினா வைசர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கை மற்றும் ஒஸ்ட்ரியா நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் நட்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டிருந்தது. மேலும் இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திரஇ பொருளாதார மற்றும் கலாசார தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.