பதுளை – துன்ஹிந்த 4ஆம் கட்டைப் பகுதியில் பஸ் விபத்திற்குள்ளானதில் 2 பேர் பலியாகியுள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த 41 பேர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் சூரியவெவ தெற்கு வளாகத்திலிருந்து மாணவர் குழுவொன்றை ஏற்றிச் சென்ற குறித்த பஸ் இன்று காலை விபத்திற்குள்ளானதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் குறித்த வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.